
ஒரே கவிதை
புரிகிறது
புரியவில்லை
புரிகிறது
புரியவில்லை
உன் பார்வையை
வாசித்துக்கொண்டே
ஒரு பைத்தியம்
பார்த்துக்கொண்டே
இருக்கிறேன் நான்
சொல்லிக்கொண்டே
இருக்கிறாய் நீ
புகைப்படமா
இலக்கிய மேடையா
எப்போது
நிறுத்துவாய் என்று
உன்னிடம்
நீ கேட்டுச் சொல்
நீ சொல்லப்போகும்
சொல்லுக்குக் கட்டுப்படுமா
என் கண்கள் என்று
என்னிடம் நான்
கேட்கத் தேவையில்லை
கொஞ்சம் திரும்பு
இப்படி
என்னையே
பார்த்துக் கொண்டிருந்தால்
என் உயிர்
திரி கொளுத்தப் பட்ட
பட்டாசுபோல் பதறுகிறது
இன்றும்
அலுவலகத்துக்குத் தாமதம்
காலை உணவுக்கு விடுப்பு
காலுறை இல்லாமல் காலணி
நிலைத்த
விழிகளோடு நீ
நிலைதப்பிய
விழிகளோடு நான்
நேரம்போவதெங்கே
தெரிகிறது
உயிர் போவதைத்தான்
உணரமுடிகிறது
- புகாரி (