
கூவி கூவி
விற்றது போக..
வழி நெடுக கத்தி
கழிந்த முழம் போக
மிச்சமிருக்கும் பூவையெல்லாம்
என்னசெய்ய?
தலையில வச்சுகலாமுன்னா
அவரு போயி மாசமிரண்டுகூட
ஆகலையே...
மிச்சமிருக்கும் பூவையெல்லாம்
என்ன செய்ய??
அவரு படத்தில் மாட்டி வச்சேன்
அழுகை வந்தது
அவருக்காகவா?
பூவுக்காகவா?....
- ரிஷி சேது (rishi_