
இருக்கும் தைர்யத்தில்
தனித்திருந்தேன் அறையில்
தளிரென ஒயிலாய்
அசைந்துருகி ஒளியீந்தும்
அதன் திரியிலிருந்து
சுடர்ந்து பரவியது இருட்டு
ஒளியையே எதிர்பார்த்திருந்த
அதிர்ச்சியிலும் இருளிலும்
அமிழ்பவனுக்கு சொன்னது:
உனக்கென ஒளி வேண்டின்
பந்தமாய் கொளுத்திக்கொள்ளேன்
உன் தலைமுடியை
என்னையே உருக்க அஞ்சித்தான்
இதுகாறுமதை
தியாகவானாய் கொண்டாடிய கபடம்
எப்படித் தான் புரிந்ததோ மெழுகுவர்த்திக்கு..?
- ஆதவன் தீட்சண்யா (