கீற்றில் தேட...


Floodவளியின் ஒளி அருந்தி
வெப்பத்தின் நிலையாமைகளால்
பருவங்கள் கண்டு
புவி வெளியில்
இயங்கும் உலகக்கூட்டம்
தம் எல்லைகடந்து
பூமி மீதல்லல்
பழிக்க நேரின்

பொங்கிவரு
புவிநீர்
சீற்றங்களால்
வகை நோக்காது
தன் மாசுக்கள்
துடைத்து
உயிர் எண்ணிக்கை
சரி செய்து
துவளாது சுற்றும் பூமி
தனின கோள்களுடன்
வேறுபாடற்று


விஜய்கங்கா (cv_இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)