
தமிழரைக் காட்டிக் கொடுக்கும் தமிழர்
தலை எடுப்போம் வாரீர்! மீண்டும் நாம்
தலையெடுக்க வேண்டுமாயின் இவரை
முளை தனிலே கிள்ளி எறிதலே
முதல் வேலை! ஓடிப் புறப்படுங்கள்!
கொலை நெடுவாள் தூக்கி இவர் சிந்தும்
குருதியில் பகைவரை மூழ்கடிப்போம்!
நெடுங்கடலை நாங்கள் அடக்கலாம்
புயலை நிறுத்திப் போர் செய்திடலாம்
சுடும் அனலை வென்று நொடிப்பொழுதில்
கொடியும் தூக்கலாம் போராடி மாற்றார்
விடுங்கணைகள் கோடி எனினும் போய்
எதிர் நின்று வெற்றி கொண்டு வரலாம்!
கொடுங் களைகள் இருக்கும்வரை நாங்கள்
இவை செய்யோம்! களை கொளுத்துவீரே!
நிறை கருவில் எமைப் பல திங்கள்
சுமந்த தாய் எனினும் சரியே இன்னல்
சிறிதளவுமின்றி எமை வளர்த்துச்
சிறப்பீந்த தந்தை எனினும் சரியே
உறுபகைவர் நட்பில் மகிழ்ந்தெங்கள்
தமிழுக்குலை வைப்பராயின் ஓடி
வெறியோடவர் உடலம் வீழ்த்துமின்கள்!
அதன்பின் போர் விழாவும் நடத்திவைப்போம்!