கீற்றில் தேட...


Electionகாட்டுவளம் பாதிபோச்சு - யாராலே?
நாட்டுவளம் மறுநாடுபோச்சு - எவராலே?

படிச்சு முடிச்சவர்க்கு வேலையில்லே
எங்கேயும் காலி இல்லே - ஏன்
மூளையில்லே - யாருக்கும்
மூளையில்லே?

வாக்கு கேக்க வர்றவங்க யாரிடமும்
‘காசுகுடு'ன்னு கேக்கறதுக்கு வாய்வருது! - எம்புள்ளைக்கி
‘வேலகுடு'ன்னு கேக்கமட்டும் மனம்வருது!
ஊரில் உள்ள புள்ளங்க எல்லாருக்கும்
வேலகுடு - பின்னவந்து
‘வோட்'டெக் கேளு - இன்னு
சொல்றதுக்கு மனம்வருதா?
யாராச்சுக்கும் வாய்வருதா?

மனித வளம் மிகுந்ததுங்க - ஒலகம்
காட்டுவளங் கூட மிகுந்ததுங்க!
முதல் வளத்தெ மிஷினக்கொண்டு கூறுபோட்றான்..
அடுத்தவளத்தை அணையக்கட்டி அழிச்சுப்போட்றான்...

அதாங்க...
பட்டுக்கோட்டை கண்ணாலசுந்தரம் பாடிவச்சாரு..
"அவன் சோறு போடறான்!
இவன் கூறு போடறான்!"ன்னு......
கூடவே கோடிகாட்னாரு!

சோறுபோட்ற நெனெப்புள்ளவர்க்கு
ஓட்டுப் போடுங்க!
கூறுபோட்ற நெனெப்புள்ளவங்க'கிட்ட
காசு வாங்குங்க! - ஐயாமாரே!
வேண்டாமின்னு சொல்லாம
காசை வாங்குங்க!

தேவமைந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)