அருகில் வராதீர்கள்
எரியத் தொடங்கியிருக்கிறேன்
இளைப்பாற
எடுத்துக் கொண்ட
இடங்களை
உறங்கும்
பொழுதுகளை
தயக்கங்களின்
பயங்களின்
வேர்களை
நான் என்பதை
மறுக்கும்
உலகங்களை
சளைக்கச் செய்யும்
சூழ்ச்சிகளை
முடியாதவைகளாய்
குறிப்பெழுதியவைகளை.
சாம்பலாகும் முன்
எரித்து விடுவேன்...
அனைத்தையும்...
அருகில் வராதீர்கள்
எரிந்து கொண்டிருக்கிறேன்.
- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி (