கீற்றில் தேட...


கைசிவக்க
மருதாணி தேடாதே
தொட்டு வைத்துக்கொள்
உன்வெட்கத்தை
.

வேரிலும்
பூக்கள் பூக்கும்
மரத்தடியில் நீ
.

தெரு முழுக்க
ஓடும்
நானெழுதிய முத்தம்
மழையில் நனைகிறாய்
.

தாகம் தணிய
முத்தமிடுகிறது
உன் உதடுகளில்
ஸ்டிரா
.

சிரிக்கும்போதெல்லாம்
தடுக்கி விழுகிறேன்
உன்
கன்னக்குழியில்


மாறன்