
பெருகுகிறது நகரம்
வளர்ச்சியின்
பதிவு புள்ளிகள் தோறும்
நகரோடு பிணைக்கப்படும்
புறநகர பெறுதிகளில்
அடைக்களமாகின்றன
வணிக வளாகங்களும்
புதிய தொழிற் ஸ்தாபனங்களும்
கிராமங்கள் நோக்கி
நகருகின்றன
நகரின்
நீட்சியுற்ற
எல்லைகள்
சாலையோர மரங்கள் இழந்து
அடர்ந்த போக்குவரத்தால்
அதிக வெப்பம் உள்வாங்கிவரும்
இடைப்பட்ட வெளி
வெறித்த கிராமங்களில்
நெரிப்படாது
இயங்கி
இளைப்பறுகின்றன
காற்றும் மேகமும்
- விஜய்கங்கா (cv_