நரையிலும் சுருக்கத்திரையிலும் புதைந்துன்னிழமைக் கட்டிழந்துடலாட
காமுற்றகணைகளெல்லாம் கூர்மழுங்கித்துருவேறி உறவுறத்துடிப் பணைய
அழகுசேர்த்தவிதழெல்லாம் காந்தவிசையற்று வீழ்ந்து முதுமையை நொந்திட
கரங்களோ டங்கங்களும் விருப்பின் குறிப்பாலியங்கிட மறுக்கும்;
காதொடு கண்கள்தம் கர்மத்தைக் கைவிட்டே தடுமாறும் வேளை
நினைவிழந்து குழம்பினின்று நீ "நீ யார்?" என்றெனை அறிந்திடக் கொள்ளா
திகைக்கையிலும், " என் அன்பே!" என்றுனைநானம் முதலிணைப்பின்
இறுக்கத்தில் இடை இம்மியும் இன்றி, இருகைகளாலுனைப் பின்னியே
எடுத்தணைப்பேன் நம்மிரு ஆவியும் உடலும் அடங்கு முன்னும்!
- அ.முத்தன், நியூயார்க் (