கீற்றில் தேட...


உன்னை காதலிக்கிறேன் என்றான்
எதனால் என்றேன்
Ladyஉன் கண்கள், அதன் கருணை
உன் இதழ்கள், அதன் இனிமை
உன் மூக்கு, அதன் முழுமை
உன் கூந்தல், அதன் குளுமை
உன் சிரிப்பு, அதன் சிறப்பு
உன் விரல்கள், அதன் செயல்கள்
உன் நடை, அதன் நளினம்
உன் இடை, அதன் வளைவு
உன் நெஞ்சம், அதன் நிறைவு
அத்தனையும் பிடிக்குமென்றான்
அவனை வழியனுப்பிவைத்தேன்...
‘என்னை’ மட்டும் பிடிக்கும் போது
வா எனக்கூறி. 

புத்தொளி (putholi@yahoo.com)