Lady"கவிதை ஒன்று
எழுதித்தா" என்றாய்...

'நீ' என்ற
ஓரெழுத்தைத் தவிர
வேறொன்றும் தோன்றவில்லை
எனக்கு!

"கவிதை எங்கே?"
கேட்டது கவிதை.

"என்
கண்களில் உன்னை
வாசித்துக் கொள்"
என்றேன்...

"ஒன்றும் புரியவில்லை"
சென்றுவிட்டாய் நீ.

புரியாத கவிஞன்...
குழப்பத்தில் கவிதை!

- இரா.சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.