
என் அன்னையிடம்..
நான் சொன்னேன் அன்று..
நாகரிகம் தெரியாத..
பழம் பஞ்சாங்கம் நீ..
புதுமை பெண் நான் என..
என் மகள் சொல்கிறாள்
எனக்கு அறிவுரை இன்று..
இன்டெர் நெட் யுகம்..
இன்னும் நீ மாறணும் என்று..
அந்த தலைமுறைக்கு
அசலாக நான் தந்ததை
வட்டியுடன் திருப்பித் தந்தது
வருங்காலத் தலைமுறை..!
- ராதிகா பாலா