
முதல் படைப்பாளியாய்.....
கோமாளி குல்லாய்களால்
கைகொட்டி அங்கீகரிக்கப்பட்டு
காசு தரும்
கைகாட்டி பொம்மையாய்......
இருண்ட பால்வெளியில்
உலகுக்கு ஒளியூட்ட
ஒற்றை நட்சத்திரமாய்,
தேவதூதனாய் தோன்றி - பின்
சாத்தனாக சபிக்கப்படும்
சாந்தமாய்..........
அப்பாவென்றொரு உறவு!
எதிர்த்துப் போராடுவதுமில்லை
எட்டி மிதிப்பதுமில்லை
இயலாமையின் இயல்பென
இமைமூடி அழும்
வெட்டிசாய்க்கப்படும் முதிர்மரமும்
வேர்வை வற்றிய அப்பாவும்!
நெஞ்சிலே கருவறைகொண்டு
பிரசவ நாள் மறுத்து
நாடியடங்கும் நொடியிலும்
நினைவை சுமந்து செல்லும்
அங்கீகரிக்கப்படாத தாய்மையது!
- பாஷா (