ஆயிரம் ரூபாய்.
குடிநீருக்கு
ஐம்பது.

மாதந்திரக்
குத்துமதிப்பாக
இருநூறு.
முறைவாசலுக்கும்
கழிவறைக்கும்
முப்பது ருபாயாம்.
ஆகமொத்தம்
ஆயிரத்து இருநூற்று
எண்பது ருபாயை
தேதி தவறாமல்
கொடுத்து வருகிறேன்
வீட்டுக்காரனுக்கு.
நாள் கடத்தாமல்
வாடகை தருவதாக
என்னை
வியந்து போற்றுகிறான்
வீட்டுக்காரன்.
அவனிடம்
சொல்லிக் கொள்வதில்லை
நான்.
கொடுக்கிற வாடகை,
வீட்டருகே கூவும்
வேப்பமரத்துக் குயிலுக்காகவும்
உனக்குத் தெரியாமல்
வந்து போகும்
காற்றுக்காகவும் தான்
என்று.
- ஜெயபாஸ்கரன் (jayabaskaran_