
பற்றிக்கொண்டு
என் தலைமுடி கோதியபடியே
நீ சொல்லும் குட்டிக் குட்டி
கதைகளில் எனை மறந்து
உறங்கிப்போவேனே
அதற்காகவேனும்..
உன்னுடன்
சமையலறையில் உட்கார்ந்து
கொண்டு
துண்டுத் தேங்காய்,
உப்பு சரிபார்க்கும் ரசம்,
என்று நீ தரும்
உணவுகளை சுவைப்பேனே
அதற்காகவேனும்...
தெருச் சிறுவர்களுடன்
போடுகின்ற சண்டையில்
கிழிந்த சட்டைப் பையை
மறைத்தபடியே உன்
அருகில் வந்ததும்
அடிப்பாயோ என்று
சிறிதும் கலங்காமல்
உன் கால்கள் கட்டிக்கொண்டு
என் மேல்தப்பில்லமா என்பேனே
அதற்காகவேனும்..
மீண்டும் சிறுவனாய்
மாறுகின்ற வழி
இருக்கிறதா என்றுதான்
கேட்பேனம்மா
கடவுளே வந்து வரம்
தந்தாலும்!
- நிலாரசிகன் (