கடைக்கண் பார்வை
என்மேல் பட்டுவிட
வேண்டுமென்று
சாலையோரங்களில்
காலங்காலமாய்க்
காத்திருந்தேன்.
என்
காதலை நீ
புரிந்து கொள்ள
வேண்டுமென்று
ஆண்டுகள் பல
எதிர்பார்த்துக்
காத்திருந்தேன்.
நீ
காதலை மறுத்ததால்
இதயம் ரணமாகி
மரணம் நெருங்கியதும்
ஒருமுறை எனைக்காண
வருவாயெனக்
காத்திருந்தேன்.
அத்தனையும்
பொய்த்துப் போயின...
என்னைக்
காக்க வைப்பதே
உன் வாடிக்கையாகிவிட்டது...
இதோ...
இப்போதும்
காத்துக்கொண்டுதான் இருக்கிறேன்...
என்
கல்லறையின் மேல்
உன் கைகளால்
ஒரு மலர்வளையம்
வைத்துவிட மாட்டாயா
என்று!
- இரா.சங்கர் (r_