
பார்த்துக் கொண்டே
இருக்க வேண்டும்.
தலைசாய்த்து நீ
சிரிக்கும் அழகிய
நிமிடங்களில் என்னைத்
தொலைக்க வேண்டும்.
மென்மையான உன்
பட்டுமேனி வலிக்காமல்
என் நெஞ்சோடு உயிர்
உருக உன்னை அணைத்துக்
கொள்ள வேண்டும்.
இப்படித்தான் தினமும்
சொல்ல நினைக்கிறேன்
பேருந்து நிற்கும் பொழுது
ஜன்னல்வழியே ரசிக்கும்
சாலையோர பெயர் தெரியா
சிறுபூக்களிடம்.
- நிலாரசிகன் (