Morningநட்சத்திர தோழர்களுடன்
நிலவு ஜன்னல் வழி பார்க்கும்
நிசப்த இரவில் ஒரு
தேவதை உறக்கம்
என் படுக்கையெங்கும்
பரவி கிடக்கிறது!

பிரபஞ்ச சாளரங்களை
துளைத்து வந்து
இமை ஊடுருவி அதன்
உள்ளுக்குள் உறைந்திருக்கிறது
ஒரு தேவ அமைதி!

மழைக்கால சிலிர்ப்பாய்
தோன்றி மறையும்
உதட்டு புன்னகையுடன்
"போடா..."வென்ற செல்ல சிணுங்கல்கள்
உறக்கத்தின் படைப்பாய் ஒரு
தேவதை கனவு!

மெல்ல தலைகோத
கருவறையில் இருக்கும்
குழந்தையாய் என்
மார்பு கூட்டுக்கிடையில்
மடங்கி கிடக்கிறது!

மலர்ந்து சிரிக்கும்போது மட்டுமல்ல
மஞ்சத்தில் உறங்கும்போதும்
மலர் அழகே!


- பாஷா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.