
ஆண்டவன பாத்துச்சி
அப்பனாத்தாள தவிர
அள்ளி அள்ளி
கொடுத்ததுக்கே
ஆயுசுபூரா
கடனாளியாயிட்டோம்
களச்சிபோயிவர
ஆத்தாவுக்கு காலமுக்கவும்
ஒழச்சிவர அப்பனுக்கு
ஒடலமுக்கவும்
முடியல
புலம்பெயர்ந்தப்பவே
புடிச்சிபோச்சி
இந்த தரித்திரம்
அடுத்த சென்மத்திலாவது
ஆடு,மாடுகளா பொறந்து
அசந்து தூங்கறவுக கூட
அசப்போட்டுகிட்டே பேசணும்
- கவிமதி, துபாய்