எதுவென்று
நீங்கள்தான்
புரிந்துகொள்ளவேண்டும்.
அதைப்பற்றி
எதுவும்
சொல்வதற்கில்லை.
அதனால்
எதையும்
அதுவாக்கும்
வல்லமையுண்டு.
அதனுள்
எவற்றைத் தேடினாலும்
அதாகப்பட்டதே அது.
அதின்
இறந்தகாலம் அதுவே
நிகழ்காலம் அதனுள்
எதிர்காலம் அதனால்.
இப்பொழுதாவது
புரிகின்றதா...
அது எதுவென்று ?
புரியாத புரிதலில்
புரிந்து நிற்பதது !
தெரியாத தெரிதலில்
தெரிந்து நிற்பதது !
அறியாத அறிதலில்
அறிந்து நிற்பதது !
அது
ஒரு
இது.
- நெப்போலியன்(