
வளர்ந்த மண்
தெரிந்த இனம்
புரிந்த மொழி
வளர்த்த பெற்றோர்
கட்டிய மனைவி
பெற்ற பிள்ளைகள்
உற்ற நன்பர்கள்
கற்ற தொழில்
அனைத்தும் பிரிந்து,
அயல்நாட்டில் அநாதையாக
அயலவனின் அடிமையாக
ஒண்டி வாழும் கொடுமையாக
ஓடி ஒளியும் கோழையாக
மாறிவிட்டேன் மானமிழந்து
மறந்துவிட்டேன் மறத்தமிழனென்று
காரணம் ஒன்றுதான்
பாசத்தையும் தாண்டிய பாசம்
நேசத்தையும் தாண்டிய நேசம்
உனக்காக நான் போடும் வேஷம்
ஆஹா.. அது ரொம்ப ரொம்ப மோசம்
ஆனாலும் பணமே நீதான் என் சுவாசம்
தமிழிலேயே சொல்லிவிடுகிறேன்
பணமே ஐ லவ் யூ..
- சுரேஷ் (