கண்ணா.. நீ இன்று சின்னப்பையன்..உனக்கு

விண்ணைத் தொடும் கல்வி தருவேன்..உனக்கு
தின்ன தினம் அறுசுவை உணவு தருவேன்
இன்னும் பல செல்வம் தருவேன்.. உனக்கு
பொன் நிகர் பெண்ணை மணமுடித்து வைப்பேன்
அன்று சொல்லிய வண்ணம் செய்து காட்டினாள்.
கண்ணன் அன்று சொன்னான்..
அம்மா நான் அன்பைத் தருவேன்..உனக்கு
வீடு தருவேன்.. வாகனம் தருவேன்..
அவையில் பெருமை தருவேன்..உனக்கு
மகிழ்ச்சி தருவேன்.. மரியாதை தருவேன்..
கண்ணன் சொல்லிய வண்ணம் செய்தான்
கண்ணன் சொல்லாதது என்ன?
இது எல்லாம் என்..திருமணத்திற்கு முன்
என்..திருமணத்திற்கு பின்..நான்..
உனக்கு பிடித்த "முதியோர் இல்லத்தில்"
பொறுப்பாய் இடம் வாங்கித் தருவேன்..
கண்ணன்.. சொல்லவில்லை.. ஆனால்
செய்து காட்டினான்.. நம்மால் சொல்ல முடிவதை
செய்ய முடிந்தாலும்.. செய்ய முடிவதை..
சொல்ல முடிவதில்லை..எதையும் செய்வதற்கு
கூச்சம் இல்லை..சொல்வதற்குத்தான்!
- பாலசுப்ரமணியன் (