
எந்த அபிப்பிராயமும்
இல்லை உனக்கு.
அன்பு என்பது
புத்தர் சம்பந்தப்பட்ட ஒன்று
என நினைத்துகொண்டிருக்கின்றாய் நீ.
கொள்ளையழகோடு
கூச்சலிட்டுக்கொண்டு வரும்
பள்ளிப் பிள்ளைகளில்
உன் பிள்ளையைப் பார்த்தால்தான்
சிரிக்க முடிகிறது உன்னால்.
அன்பை
தருவதற்கு மட்டுமல்ல
பெறுவதற்கும் விருப்பமற்ற
வாழ்க்கை முறை
உன்னுடையது.
இருந்தும்,
யாரேனும்
கடன் கேட்கும்போது மட்டும்
கூசாமல் சொல்லிவிட்டுப் போகிறாய்
கடன் அன்பை முறிக்கும் என்று.
- ஜெயபாஸ்கரன் (jayabaskaran_