
பழைய புகைப்படம் ஒன்று!
அழகிய ஆலமரம்
அருகில் வரிசை வரிசையாய்
ஊழியர்களும் நிர்வாகிகளும்!
உற்றுப் பார்த்தேன்...
அழகாகச் சிரித்துக்கொண்டு சிலர்!
ஆணவமாய்ப் பார்த்துக்கொண்டு பலர்!
ஓ! இந்தக் காலங்கள்தான்
எத்தனை கணப்பொழுதில்
கரைந்து விட்டன!
புகையானோர் பாதி!
புதையுண்டோர் மீதி!
ஆனால்...
புதிய விழுதுகளுடன்
ஆலமரம் மட்டும்
இன்றும் கம்பீரமாக...!
- அக்னிப்புத்திரன் (