
ஆச்சரியம்!
எலியும்
பூனையும்
கீரியும்
பாம்பும்
கொஞ்சிக் குலாவி
கூடி விளையாடின!
அடி..வெட்டு!
குத்து! விடாதே!
காலைவாரி விடு!
மிதித்துத் தள்ளு!
சத்தம் கேட்டு
சட்டென்று விழித்தேன்..
எங்கும்
ஒரே நிசப்தம்!
அட மனிதா!
நீ கனவில் கூடவா இப்படி?
- அக்னிப்புத்திரன் (