கீற்றில் தேட...


இலைகளின் அசைவில் சோகம்
Railway trackகாற்றின் பயணத்தில் பெருமூச்சு
சருகின் வளைவுகளில் உயிர்ப்பு - என
குறிப்பால் உணர்த்துகிறாய்.

சிந்தனையற்று வெறுமை பெற
உன்னிடத்தில் அமர்கையில்
பரபரப்பாய் புகைவண்டி
கூட்டம் கலைந்ததும்
மீண்டும் மௌனத்தில் நாம்

மழை தூறும் மாலைப் பொழுதில்
உனக்கான வருகையில்
காற்றால் தழுவி சருகால் வருடி
சாரலைப் பரிசளித்தாய்

ஆலும் அரசுமே
நம் நண்பர்கள்

உன் மேல் காதலிருந்தாலும்
உனது நீண்ட நெடும் பாதையில்
உன்னுடன் இணைந்து
ஊர் எல்லைவரைதான் நான்
ஓடிவருவேன் -

பள்ளி செல்லும் பெண்பிள்ளைக்கு
ஆளில்லா ரயில் பாதையில் தனியே
என்ன வேலை என்பார்களே. 

பத்மப்ரியா (padmapriya_இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)