
எந்த இனமென்று
துறவியை ஏன் கேட்கிறாய்
மதத்தலைவனோ.. மண்ணின் தலைவனோ
போரிடும் வீரனோ.. புகழுடை மனிதனோ
யாவரும் தேடிடும் கருப் பொருள் ஒன்று தான்
தச்சன் கண்ட கடவுளை சில நேரம்
துறவியும் கண்டதில்லை
முடித்திருத்துவோன் கண்டதை பலநேரம்
முனிவனும் அறிந்ததில்லை
இந்துவோ முஸ்லீமோ
தேடியதும் அடைந்ததும்
ஒன்று தான்
அடைந்ததை அறிந்திட
தெரிவதெல்லாம்
வெறுமையல்லவா ?
- ஐயப்பன் (iyappan_