நட்ட செடிகளுக்கெல்லாம்
நான் தண்ணீர் ஊற்றி வந்தேன்
நீ செல்லமாய் வளர்த்த
நாய்குட்டியும் பூனை குட்டியும்
என்னாலேயே குளிப்பாட்டப்பட்டன
உன் அம்மாவுக்காக
கடைக்கு போய் வந்தேன்
உன் அப்பாவுக்காக
செய்திதாள் வாங்கி வந்தேன்
உன் தம்பி தங்கைக்கு
மிதி வண்டி பழகித் தந்தேன்
உன் அண்ணனோடு
அன்பாய் பழகி வந்தேன்
நீயோ உன் காதல் கடிதத்தை
என்னிடம் தந்து பக்கத்துவீட்டு
பையனிடம் பத்திரமாக
சேர்க்க சொல்கிறாய்!
காதலியே!
காக்காய் பிடிக்க தெரிந்த எனக்கு
உன் மனசை படிக்க தெரியலியே!
- ராஜ்