இன்றும் இருப்பாயோ?
பரிட்சை தோல்விக்கே
பயந்தாயே..?
இப்பொழுது
சின்ன சின்ன தோல்விகளை
எப்படித் தாங்கிக் கொள்கிறாய்?
யதேச்சையாய்
கடைவீதியில்
காணநேர்ந்தால் புன்னகைப்பாயோ?
கல்லூரி இருக்கை மீது
தாளம் போடும் பழக்கத்தை...
விட்டுவிட்டாயா? இன்னமுமிருக்கிறதா?
அன்றுபோலவே இன்றும்
மழைத்துளிக்குள்
முகம்புதைத்து விளையாடுகிறாயா?
ஒரு இலையுதிர் காலத்தில்
சருகு மிதித்து
சந்தோஷப்பட்ட அந்த
குழந்தைதனம் இன்னமும் இருக்குமா?
இப்படி
எங்கு இருந்தேனும்
எல்லா சந்தர்ப்பங்களிலும்
சின்ன சின்ன நிகழ்வுகளிலிருந்து கூட
காதலைப் பிரித்தெடுக்கத் தவறுவதில்லை.
பிரிந்து போன காதலர்கள்!
ஆயுள் முழுவதும்
ஆழமாய் மிக ஆழமாய்
காதல் நினைவுகளை
அசைபோடுவதற்காகவேனும்
காதல் பிரிவு அவசியம்தானோ?
- ரசிகவ் ஞானியார் (