உனது வானத்தின் நிலவு
எங்கோ விழுந்து விட்டது
உன் இதயத்தின் சூரியோதயம்
தொலைந்து போய்விட்டது

விசும்பல்களிலும் புலம்பல்களிலும்
புலர்ந்துவிடுவதில்லை - நீ
தொலைத்த வாழ்க்கை அதையும்
கடந்து எதுவோ இருக்கிறது

திரும்பிபார் உனக்கான பாதை
இன்னும் அடைக்க் படவில்லை
முயற்சித்தால் திரும்பிவிடலாம்
பாதையும் வெகு தூரமில்லை

உன் கடமைகளில் காதல்மட்டுமல்ல
விரைந்து முடித்துக்கொள்ள- அதையும்
கடந்து எதுவோ இருக்கிறது உன்
விழிகளை அகல விரித்து பார்

குருகி நிற்பதிலும் குருந்தாடி
வளர்ப்பதிலும் குமுறி அழுவதிலும்
நிறைந்துவிடுவதல்ல உன் காதல்

தோல்வியை தூக்கி தூர
வைத்துவிட்டு தொலை நோக்கு
பார்வையில் உலகைப்பார் நீ
காதலிக்க ஏராளம் ஏராளம்.

- ராஜ் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.