ஒன்றின் பின் மற்றொன்றாய்
பின்னிப் பிணைந்து
நகரமறுக்கும் என் நாட்கள்
பூக்கள் மலர்கின்றன...!
இணை தேடி குயில்கள் பாடுகின்றன
நிலவொழுகும் இரவுகளில்
எங்கிருந்தோ வரும் இன்னிசை
உன் பாடலை ஞாபகப்படுத்த...!
பெருகி வரும் உணர்வுகள்
காலம் எதுவுமற்ற
வெறும் வெளியாய் தோன்றிலும்
அதுவே யாவுமாகிறது...!
மீளப் பிறிதோர் கணத்தில்
என் கணங்களைத் துடைத்தெறிகிறது
எதிர்த்தல் சாத்தியமற்றுப் போக
மகிழ்ந்து சிரிக்கின்றது என் நாட்கள்...!
ஒற்றைச் சொல் போதும்
கொண்டு வரவா என்கிறது காற்று
வராத ஒரு சொல்லைக்
கொணரல் எங்ஙனம்?
எதுவென அறியாது எழுதத் தொடங்க
என் சொற்கள் நழுவிக்
கால வெளியில் மறைந்தன
காத்திருத்தல் என்பது...
சொற்களில் கூட வேண்டாமென்று
என் நாட்கள்...!
ன்றின் பின் மற்றொன்றாய்time_340
பின்னிப் பிணைந்து
நகரமறுக்கும் என் நாட்கள்

பூக்கள் மலர்கின்றன...!
இணை தேடி குயில்கள் பாடுகின்றன
நிலவொழுகும் இரவுகளில்
எங்கிருந்தோ வரும் இன்னிசை
உன் பாடலை ஞாபகப்படுத்த...!

பெருகி வரும் உணர்வுகள்
காலம் எதுவுமற்ற
வெறும் வெளியாய் தோன்றிலும்
அதுவே யாவுமாகிறது...!

மீளப் பிறிதோர் கணத்தில்
என் கணங்களைத் துடைத்தெறிகிறது
எதிர்த்தல் சாத்தியமற்றுப் போக
மகிழ்ந்து சிரிக்கின்றது என் நாட்கள்...!

ஒற்றைச் சொல் போதும்
கொண்டு வரவா என்கிறது காற்று
வராத ஒரு சொல்லைக்
கொணரல் எங்ஙனம்?

எதுவென அறியாது எழுதத் தொடங்க
என் சொற்கள் நழுவிக்
கால வெளியில் மறைந்தன
காத்திருத்தல் என்பது...
சொற்களில் கூட வேண்டாமென்று
என் நாட்கள்...!
- வரதா
Pin It