கீற்றில் தேட...


கண் பொத்தி கைப்பிடித்து
அழைத்து செல்கிறது உன் சிரிப்பு
மூங்கில் நிறைந்த மலைகள் கடந்து
பிராணிகள் புணரும் காடு கடந்து..

கண் திறந்து விட்டு சுழன்றடிக்கும்
புயலின் பின்னால் ஓடுகிறாய்
திரும்ப வர வழித் தெரியாமல்
உன் சுவடுகள் மறைவதை கவனியும் போது
என் மேல் வந்து விழுகிறது
திசை தெரியாமல் பறக்கும்
ஒரு பறவையின் இறகு.......

கார்த்திக் பிரபு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.