உங்கள் கால்களை கொஞ்சம்
நகர்த்துங்கள் போதும்.
உங்கள் செருப்பின் கீழ்
மிதிப்பட்டு உயிர்
அறுபட்டு கிடக்கிறோம்
இந்த பிரபஞ்சத்தின்
ஏத்தனையோ பிரமாண்ட
வளர்ச்சிக் கண்ட “உங்கள் அறிவு”
எங்களை மட்டும்
சாக்கடையின் மிதவையாகவே
சபித்துக் கெண்டிருப்பதுதான்
புரியவில்லை.
ஏங்கள் துயர்துடைக்க
ஏத்தனிக்காத நீங்கள்
எங்களை அருவறுத்து ஒதுக்க
எந்த அறுகதையும் அற்றவர்கள்
எங்களை
உயிர் பிண்டமாய் கூட
மதிப்பதில்லை உங்கள் பகுத்தறிவு
எங்களை
கேவலமான அடைமொழியால்
கீறி பார்ப்பதே உங்கள் சுகம்.
சராசரி சமுதாயத்தின்
சாடல் கிடக்கட்டும்
பேனா பிடிக்கும்
பிதாமகன்களே!
நீங்களேனும்
திருத்தி எழுதுங்களேன்
எங்களை
‘திருநங்கை’ என்று.
ஏனெனில்
மனிதர்களில்
மறுநடவு செய்யப்பட்ட
எங்களுக்கு
அதுதான் ஓர்
அழகிய அங்கீகாரம்.
- சி.கருணாகரசு.