
சந்திப்புகளில் சறுக்கி விழுகிறது
இதயம்
குடையிருந்தும்
நீ இருந்தும் மழையில்லை
இலக்கியமே
உன் மௌனப்பேச்சின் பரிசு
இன்று வரை
உண்மையைப் பேசமுடியவில்லை
உன்னோடு
வருடிக்கிடக்கிறது
என் கழுத்துக்குக் கீழே உன் வதனம்
“அம்மா”வை முந்திக்கொண்டு
தும்மலில் உன் பெயர்
- அறிவுநிதி