இரவில் மழை!

ஆர்பாட்டம் செய்து அழுகிறாள் வான மகள்!
ஆசை கொண்ட மனாளன்
ஆதவனை காணவில்லை என்று!

அதிகாலையில் வந்து விடுவான்
ஆதவன் என்று
ஆறுதல் சொல்வதற்கு
அருகில் யாருமே இல்லையோ ?காத்திருக்கிறேன்!..........

காதலுக்காக
தன் மலர்களை
தியாகம் செய்துவிட்டு
தனிமையில்
காத்திருக்கும் ரோஜா செடிகளை போல

நானும் காத்திருக்கிறேன்
உனக்கான என்
ஊமை காதலோடு!


தியாகம்

எனக்கு மிகவும் பிடித்தது
செருப்பு!( ?)..

ஏனெனில்
நான் அதை மிதித்தாலும்
அது என்னை சுமக்கிறது !!......

சசிகலா கவிதைகள் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It