கீற்றில் தேட...


Peopleதாங்கும் அன்பிற்கும்
ஏங்கும் அன்பிற்கும்
வித்தியாசம் தெரியவில்லை.

எல்லோராலும்
உணரப்பட்டும்,
அலட்சிப்படுத்தப்படுகிறது
உண்மை.

ஊனமாகிப் போனவர்களின்
வாழ்வு வாழ்கிறோம்
நாம்.

செயல் திறனற்ற
உறுப்புகளைக் கொண்டு
தனக்குத் தானே
சுமையாகிப் போன சோகம்
நிகழ வேண்டாம் யாருக்கும்...

பிரியங்களை உதாசீனப்படுத்திவிட்டு
கருணைக்காக கையேந்துகிறோம்

எந்த திசையில் நின்றாலும்
அவரவர்க்கு
அவரவர் வானம்
அவரவர் காற்று.

அ. லட்சுமிகாந்தன்