
புழுதியில்லாத பொழுதுகளும்
இறுக மூடி
என்னுடலின்
வழமையான வாழ்கைப் போராட்டம்
பனிப்புகாருக்குள் பொசிந்தபடி
கரைந்து கொண்டிருக்கிறது காலம்
என் உயிர்க் கடிகாரம்
பிசகாமல்
இயற்கையும் வஞ்சித்து
நெஞ்சை அரிக்கும்
கசப்பான காற்றோடு - என்
தேசம் அனுப்பி வைக்கும்
உணர்வின் வலிகளையும்
செதுக்கிக் கொண்டிருக்கிறது
உறக்கம் கலையிழந்து
நீண்ட விழித்திருப்புக்கள்...
காணாமல் போவதும்
கப்பம் கேட்பதும்
கடத்திச் செல்வதும்
காட்டுமிராண்டி
அரக்க நிழல்கள்
மீட்டி அசைபோட்டு
மூச்செறியும் நேரத்தில்...
சுகம் கசிந்து
மனம் மகிழ்ந்து
நான் மட்டும் இப்போ
எப்படிச் சரிந்து தூங்குவது?
எனக்குத் தனிமையில் உன்
நினைவுகளும் பயங்கரமாக இருக்கிறது
சுகமற்று சுமந்துவரும் உன்
பழிவாங்கும் வார்த்தைகளால்; இப்பொழுது...
- நவஜோதி ஜோகரட்னம் (