நினைவே நின்றுவிடு
இல்லை எனை தின்றுவிடு
கனவே கலைந்துவிடு-இல்லை
நினைவை கலைத்துவிடு,
சந்தன நிறத்தவளை
சாம்பிராணி மணத்தவளை
வாழை குருத்தவளை
காணமுடியாத வாழ்க்கை.
நான் இன்னும் முழுக்கப்
படிக்காத இலக்கிய புத்தகம்
அவள் அள்ள குறையாத
அழகிய அட்சய பாத்திரம்
ஆண்மையைகட்டி இங்கு
நானும்-பெண்மையைகட்டி
அங்கு அவளும், நாங்கள்
நடத்தும் காதல் ராஜ்ஜியம்
கணக்குப் பார்த்தால்
எல்லாம் பூஜ்ஜியம்,
சிறிது கண்மூடினால்
சிரிக்கின்ற உனது முகம்
சிறிதளவும் குறையாமல்
நிலவுபோல அதுவரும்
வானத்து வெண்ணிலவே
இலக்கியத்து பெண்ணிலவே
உன் நினைவு தாக்குதடி
நிலைகுலைய வைக்குதடி.
வண்ணத்து பைங்கிளியே
என் எண்ணத்து பைந்தமிழே!
நிலவும் தேள்போல ஆனதடி,
என் நிழலும் உன்போல தோனுதடி
வெறுமையாய் என்காதல்சோலை
வெளி நாட்டில்தான் எனது வேலை
இப்படியே கழியுமோ வாழ்க்கை!
இது நித்தமும் வேதனை வேட்கை
- ராஜகுமாரன் (rrajku@yahoo.com)