உன்னுடைய மவுனம் தான் அது!
நீதான் உடைக்க வேண்டும்

உள்ளே இருக்கலாம்
இன்னொரு ரணமோ..
இன்னொரு மருந்தோ..
இன்னொரு கதையோ...
எதுவாயிருந்தாலும்
எனக்குப் பழகியது தானே!
இன்னமும்...
நடுக்கும் தயக்கக் குளிரில்
காரணங்களைப் போர்த்திக்கொள்கிறாய்.
சூரிய சந்திரனும்...
தென்றல் காற்றும்...
நம் பேச்சுக்களில்
பூத்த 'கவிதை'களும்
எங்கும் போய்விடவில்லை
நாம் தான்
வசந்த காலத்திலிருந்து
வெளியே வந்திருக்கிறோம்.
மறுபடியும் சொல்லி விடுகிறேன்.
உன்னுடைய மவுனம் தான் அது.
நீதான் உடைக்க வேண்டும்.

(தூரமாகிப்போகும் ஒரு நெருங்கிய ____________க்காக)

இப்னு ஹம்துன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It