கீற்றில் தேட...

சைரனை ஒலிக்கவிட்டபடி,
சிவப்பு விளக்கு,
ஒளிர்ந்தணைய,
மருத்துவமனை நோக்கி,
விரைகிற ஆம்புலன்சை,
காட்சி பிழையாய்,
கருப்பு உருவம் ஒன்று,
எப்பொழுதும்,
துரத்திக் கொண்டிருந்தது,
என் மன பிரவாகத்தில்.....

ஒரு முறை,
வாய்ப்புகிடைக்க,
அவ்வுருவத்தை வழிமறித்து,
யாரென்றேன்,
முறைத்த விழிகளுடன்,
கனமாய்,
"காலன்" என்றபடி,
துரத்துவதை  தொடர்ந்திருந்தான்....

அதிர்விலிருந்து,
மீள்வதற்குள்ளாகவே....
தூரத்து வாகன நெரிசலில்,
தேங்கியிருந்தது,
ஆம்புலன்ஸ்!...