மரிக்கத்தானே வேண்டியிருந்தது
இயேசுவும்
இறக்கிவை ரூப அரூபச் சுமைகளை
நெருங்கியமர் என்னை
ஏற்றுத் திளை என் உபசாரத்தில்
உரையாடலுக்குப் பின்
அநாதையாய் வீசி நட சுமைகளை
பீளையும் குரும்பியுமன்றி
வேறேதும் அண்டாத அவயவங்களும்
கசடு போக்கி சுத்திகரித்த மூளையுமாகி
எதன் கண்காணிப்புமற்று
உள்வயமானதாகட்டும் எஞ்சிய பயணம்
ஆனால்
சுமை நீங்கிய நினைப்பே
கனத்து வலிக்குமானால்
குற்றஞ்சாட்டாதே என்னை.
- ஆதவன் தீட்சண்யா (