வயிற்றுக்கு வெளியே
வாங்கிய உதையால்....
வயிற்றுக்கு உள்ளே
சுகமான உதை வாங்க
வழியில்லாமல் போனது..!
தினமும்
கண்ணீர் ஊற்றி காத்திருக்கிறேன்
அடிவயிற்றில் முளைக்க மாட்டாயா
என் பிள்ளையே..!
தனக்கே உணவில்லாதவள்
எனக்கும் எப்படி சேர்த்து உண்ணுவாள்
என பயந்து வராமல் போனாயா..!
மூன்று கிலோ பாறாíகல்லை
அடிவயிற்றில் கட்டியிருக்கிறேன்..!
அந்த பவித்ரமான சுமையை அனுபவிக்க..!
இருமார்பு குடங்களும்
ததும்ப ததும்ப
பால் சுமக்க வேண்டும்..!
நீ உள்புறம் உதைக்க
நான் வெளிப்புறத்தில்
தடவி கொள்ள வேண்டும்..!
நான் எழுப்பும் கிலுகிலுப்பை சத்ததில்
நீ உள்ளிருந்தே சிரிக்க வேண்டும்..!
பிள்ளை காதல் கொண்ட என் இதயத்தை
சற்று தலை தூக்கி
நீ உள்ளிருந்தே பார்க்க வேண்டும்..!
வயதினால் வந்துவிட்டது.
உடல் முழுவதும்..!
உன்னால் ஏற்படாத
அடி வயிற்று சுருக்கம்..!
எப்போது நீ கருவுருவாய்..!
என் செல்லமே..!
- தியாகுஆசாத் (