கணங்களில்
மண்ணில் நுழைந்த
காதல் மரமாக
பின்னால்!
நிமிசத்தை
தின்னாமல்
வேர்களை தின்னும்
விரக நாக்குகள்!
நிழலில் இருந்தும்
வேர்க்கும் மனது!
அசையாத இலைகளால்
ஓவிய மரங்கள்!
பொழுது போக்க
என்னையே படிக்க
முயலும் புத்தகம்!
சடுதியில் வரும்படி
காற்றை அனுப்பு
இலைகளுடனாவது
பேசிக் கொண்டிருக்க!
- தியாகு (