
மாறிப் போயிருந்தேன்.
சமையலறையிலிருந்து ஓடிவந்து
திடீரென அவள் என் கழுத்தை நெரிக்கின்றாள்.
அவள், ஓவென கதறியடித்துக் கொண்டு, ஓடிவந்து,
என்னை விடாமல் தாக்குகிறாள்.
நள்ளிரவில், படுக்கையிலிருந்து எழுந்து
கத்தி அரற்றுகிறாள்.
இரவில், திரைப்படங்களில் வருவது போல்
தலையை விரித்து, வெள்ளைச் சேலையணிந்து
நான் அமர்ந்து படிக்கும் அறைக்குள் வந்து விடுகிறாள்.
திடீரென கறுத்த உருவம் கண் முன்னே நிற்கிறது
அது அவள்தான்.
அவளைக் குறித்த பயங்கள்
நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன.
- ம.ஜோசப்