புதிதாய்...
பூத்திருந்தது ஒரு மலர்.!
ஆசையாய் பரித்தேன்!
அடடா...!
பட்டாம்பூச்சி..!
***
மேகங்களின் கால்களில்
தீக்காயம்!
பாவம்.
சூரியனை மிதித்துவிட்டதாம்.
***
பஞ்சும் நெருப்பும் பற்றிக்கொள்ளுமாம்..!
பற்றவில்லையே..!
சூரியனும் மேகமும்.?
***
மழையில்..
நனைந்து வந்த குடை
திண்ணையில்.!
உள்ளே போனவர்கள்
தலை துவட்டிக் கொள்கிறார்கள்.!
**
- தியாகுஆசாத் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )