
அருகருகே பார்த்துக் கொண்டிருந்தேன்.
நினைத்து, நினைத்து
அழும் குழந்தைபோல்
நினைத்தவுடன் மழை
பெய்யும் பிரதேசமாயிருக்கிறது.
கடல் ஆர்ப்பரித்து, அலைகளை
உருவாக்கிக் கொண்டிருந்த
வண்ணமேயிருந்தது.
தனியனாய் கடலை
பார்த்த வண்ணமேயிருந்தேன்.
வறண்டு போன ஆறும்,
அதன் குடிகளாகிய என் மக்களும்
என் மேல் படர்ந்து கொண்டனர்.
பல காதங்கள் கடந்து அழும்
என் குழந்தையின் குரல் கேட்க ஆரம்பித்தது.
கடல் ஆர்ப்பரித்தபடியே,
மழையும் பெய்தபடியே, இருந்தன.
அவைகளுக்கு என்னிடம் யாதும் இல்லை.
- ம.ஜோசப்