
குறிக்கோளுடன்
அணுகுவர்
பலரின் குறிகள்
பக்தர்களையே
பதம் பார்க்கும்
குறிவைத்து தாக்கப்படும்
சமூகங்களோ இன்னும்
தங்கள் குறிகளை
தயாரிக்கவேயில்லை
குறிகளுக்கும்
இலக்குகளுக்குமிடையே
வாழ்க்கை
குறிக்கப்படுகிறது
எத்தனைமுறை
ஏமாற்றப்பட்டும்
ஓட்டுக்குறி
ஒழுங்கமைவதேயில்லை
குறிவித்தியாசப்படுகிறது
இனத்திற்கினம்
நீளமாக; ஆழமாக
எல்லாகுறிகளும்
அடுத்தவர்
விடுதலைக்கே ஊறுவிளைவிப்பதால்
நிறைவேறாமல்தான்
போய்விடுகின்றன
பாசிசப் பொய்க்குறிகள்
- கவிமதி, துபாய்