
அந்த மணியோசை ..
நடுவில் .....
தலையை மட்டும் வெளியே நீட்டி
மண்ணுக்குள்
உடலை புதைத்திருக்கும்
பெரிய மலை பார்க்கவிடாமல்
மறைக்கிறது.!
இது சமய கோவிலின்
கோபுர கொம்பிலிருந்து
வருவது இல்லை
என்பது திண்ணம்..!
ஏதோ..!
தேவதையின் கூந்தல் பூ
அதன் மேல்விழுந்ததால்
வந்த அதிர்வாக இல்லை.!
காலை பசியில்
வெள்ளை புறக்கள்
எதுவும் கொத்தியதாக இல்லை.!
அதை கடந்து போகும் காற்று
செல்லமாக கிள்ளியதால்
எழுந்த சத்தமாகவும் தெரியவில்லை.!
அந்த ஒசையின் மயக்கதிலேயே
காகிதத்தில் விழுந்து கிடக்கும் கவிதையை
பேனாவால் தட்டி எழுப்பியும்
எழவில்லை.!
அந்த ஒசை என் அருகில் வருவதை
உணர்கிறேன்...!
பனங்கள் சுமந்து
பென்டுலமாய் ஆடி
என்னை கடந்து போகிறாள் ஒருத்தி..!
அவளை வினாவினேன்..!
அந்த மலைக்கு பின்னாலிருந்து
வருவதாய் சொன்னாள்.!
- தியாகுஆசாத் (