
வரிசைப்படுத்துகையில்
ஞாபகம் வருகிறது
குழந்தையில் தொலைந்துபோன
சம்பவம்.
அம்மாவும் அப்பாவும்
தேடித்தேடி
அலுத்துப்போனதில்
நான் கடற்கரையில்
மணல்வீடு கட்டுவதும்
அலைவந்து அதைக் கலைப்பதும்
மீண்டும் கட்டுவதும்
அலைவந்து கலைப்பதுமாய்
கவலையற்று
விளையாட்டில் ஈடுபட்ட அந்த
நாட்களை நினைவுபடுத்தி
குழந்தைப்பருவத்திற்கே
அழைத்துச் செல்கிறது
முன்னெப்போதோ
எழுதி வைத்து
இன்று வாசித்த கவிதை.
- இலாகுபாரதி (sa_